காவிரி- குண்டாறு திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு

காவிரி- குண்டாறு திட்டத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு

Published on

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இத்திட்டத்துக்கு புதுக் கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் குன்னத்தூர் கிராமத்தில் 122 பேரிடம் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டிய 90 ஏக்கரில், 63 பேரிடம் இருந்து 50 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு நிலம் வழங்கிய நில உரிமையா ளர்களுக்கு விராலிமலையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

நிலம் வழங்கியுள்ளோருக்கு அரசின் மதிப்பீட்டு தொகையைவிட 3 மடங்கு கூடுதலாக வழங்கப் படும். அதோடு, 25 சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in