எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்

எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை மகா தீபம்
Updated on
1 min read

பெரம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில், எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண் டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு பிரம்மரிஷி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு திருவருட்பா பாராயணம், கோபூஜை, அஸ்வ பூஜைகள், சித்தர்கள் யாகபூஜை ஆகியவை சிவனடியார்கள் முன்னிலையில் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தீபக்கொப்பரை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்குப் பிறகு டிராக்டர் மூலம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மலை உச்சிக்கு தீபக்கொப்பரை கொண்டு செல்லப் பட்டது. தொடர்ந்து, மகாசித்தர்கள் டிரஸ்ட் இயக்குநர்கள் சுந்தர மகாலிங்கம், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் தலைமை யில், மாலை 6 மணியளவில் பிரம்மாண்ட கொப்பரையில் 300 கிலோ நெய், 1,000 லிட்டர் விளக்கு எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் இடப்பட்டு, 1,008 மீட்டர் நீளம் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, இயக்குநர் ராதாமாதாஜி மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

கங்கைகொண்ட சோழபுரத்தில்...

தொடர்ந்து, சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, பிரகதீஸ்வரர் முன்பு தீப ஒளியும், கோயில் வாயில் முன்பு சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாமன்னன் ராஜேந்திர சோழன் இளைஞர் அணி மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in