திருநெல்வேலியில் அமமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலியில் அமமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்

நெல்லையில் அமமுக ஆலோசனைக் கூட்டம்

Published on

திருநெல்வேலியில் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் அறிக்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் பரமசிவ ஐயப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள் தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, தலைமை நிலையச் செயலாளர் உமாதேவன் பேசினர். புறநகர் மாவட்டச் செயலாளர் குமரேசன், தொழிற்சங்க பேரவை நிர்வாகி பரமசிவம், மத்திய மாவட்டச் செயலாளர் முருகையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் செய்தி யாளர்களிடம் மாணிக்கராஜா கூறும்போது, “தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்து விடுதலையான பின்னர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் தெரியவரும். 3-வது அணி அமைப்பது தொடர்பான முடிவுகளை டிடிவி தினகரன் மேற்கொள்வார்” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in