விஷம் வைத்து 3 மாடுகள் கொலை

விஷம் வைத்து 3 மாடுகள் கொலை
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கா.தெற்குக்களத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி மூக்காயி. விவசாயியான இவர், 1 ஜல்லிக்கட்டு காளை உட்பட 7 மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பிய மாடுகளுக்கு மூக்காயி தண்ணீர் வைத்துள்ளார். அதன்பிறகு, ஒவ்வொரு மாடாக மயங்கி விழுந்தது. அதில், ஒரு ஜல்லிக்கட்டு காளை, 2 பசு மாடுகள் உயிரிழந்தன. 2 பசு மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை மாவட்ட இணை இயக்குநர் இளங்கோவன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மாடுகளுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாக வழக்கு பதிந்து அன்னவாசல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in