சிறுமிக்கு திருமணம் 4 பேர் கைது

சிறுமிக்கு திருமணம் 4 பேர் கைது

Published on

சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக மணமகன் உட்பட உறவினர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சேடபட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சீலயம் பட்டியைச் சேர்ந்த முருகன்(24) என்பவருக்கும் நவ. 26-ம் தேதி எழுமலையிலுள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு சிறுமியின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சேடபட்டி ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் ஜெயா, எழுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் முருகன், நாகராஜ் (45), தவசியம்மாள்(40), ராமுதாய் (69) ஆகியோரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வரு கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in