நெய்வேலி ஆர்.பி.எஸ் இல்ல திருமண விழா திராவிடர் கழக தலைவர் வீரமணி நடத்தி வைத்தார்

நெய்வேலி ஆர்.பி.எஸ் இல்ல திருமண விழா வடலூரில் நடைபெற்றது.
நெய்வேலி ஆர்.பி.எஸ் இல்ல திருமண விழா வடலூரில் நடைபெற்றது.
Updated on
1 min read

நெய்வேலி ஆர்.பி.எஸ் இல்ல திருமண விழா வடலூர் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திராவிட கழக தலைவர் வீரமணி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆர்.பி.எஸ் இளந்தென்றல்-கே.சி.தி.விஷ்ணு மகேஸ்வரன் திருமணத்தை நடத்தி வைத்தார். திராவிடர் கழக செயல் தலைவர் அறிவுக்கரசு, தலைமை தாங்கினார். தாகூர் கல்வி குழும நிறுவனர் ராஜாபாதர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஜெயக்குமார், திராவிட கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், தலைவர் தண்டபாணி, மண்டல செயலாளர் தாமோதரன், விருத்தாசலம் இளங்கோவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், நெய்வேலி வடலூர் வர்த்தகர் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமணத் திற்கு வந்தவர்களை அரங்க.பன்னீர் செல்வம்‌தங்கம் மற்றும் கேசி. தினகரன் ஜோதி ஆகி யோர் வரவேற்றனர். ஆர்.பி.எஸ் பண்பாளன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in