மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

கண்டாச்சிபுரம் அருகே கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக, நேற்று முன் தினம் மாலை சரவணன் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பந்தல் அதிக காற்றால் சாய்ந்தது. அதனை தாங்கிபிடித்தபோது, அதில் அமைக்கப்பட்ட சீரியல் லைட்டின் மின்சாரம் தாக்கி சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சரவணனின் மகள் திருமணம் நேற்று காலை திருவண்ணாமலை மாவட்டம் ஆவூரில் நடைபெற்றது. மணப் பெண், மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in