

லட்சுமி விலாஸ் வங்கியை தனி யார் வங்கியுடன் இணைக்கும் முயற்சியை ரிசர்வ் வங்கி கைவிட வேண்டும். தேசிய வங்கியோடு இணைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் லட்சுமி விலாஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
லட்சுமி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்து 2017 வரை, 91 ஆண்டுகளாக தொடர்ச் சியாக நிகர லாபம் ஈட்டி வந்தது. 2016-ல் வங்கியின் எம்.டி.யாக பார்த்தசாரதி முகர்ஜி பொறுப் பேற்ற பிறகு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கிய கடன்கள் வாராக் கடன் களாக உள்ளதால் நிதி நிலை மோசமடைந்துள்ளது.
இதனால் லட்சுமி விலாஸ் வங்கியை வெளிநாட்டு வங்கி யுடன் இணைக்கும் முயற் சியை ரிசர்வ் வங்கி மேற்கொண் டுள்ளது. வெளிநாட்டு வங்கி யுடன் இணைக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள், சுமார் 40 ஆயிரம் ஊழியர்கள் நிலை கேள்விக்குறியாகும். இவர்கள் நலனைக் கருதி தேசிய வங்கி யோடு இணைக்க முயற்சி மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.