Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

கொள்ளிடத்தில் 137 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு (மில்லி மீட்டரில்):

திருச்சி மாவட்டம்

மருங்காபுரி- 32.2, கல்லக்குடி- 27.2, துவாக்குடி- 21, புள்ளம்பாடி- 20.8, சமயபுரம்- 20.6, லால்குடி- 20, விமான நிலைய பகுதி- 19, நந்தியாறு தலைப்பு- 18.6, திருச்சி மாநகரம்- 18.4, தேவிமங்கலம்- 18, நவலூர் குட்டப்பட்டு- 16.2, புலிவலம்- 15, ஜங்ஷன்- 14.8, பொன்மலை- 14.2, வாத்தலை அணைக்கட்டு பகுதி- 12.4, துறையூர்- 12, பொன்னணியாறு அணை பகுதி- 10.2.

தஞ்சாவூர் மாவட்டம்

அணைக்கரை- 85, மஞ்சளாறு- 78.2, கும்பகோணம்- 59, பாபநாசம்- 51.4, திருவிடைமருதூர்- 49.8, நெய்வாசல் தென்பாதி- 46.2, அய்யம்பேட்டை- 41, திருவையாறு- 40, வெட்டிக்காடு- 38, தஞ்சாவூர்- 38, மதுக்கூர்- 37.8, வல்லம்- 34, குருங்குளம்- 31.2, பட்டுக்கோட்டை- 31, பூதலூர்- 28.8, கல்லணை- 25.6, ஒரத்தநாடு- 23.8, அதிராம்பட்டினம்- 23.4, திருக்காட்டுப்பள்ளி- 18.6, பேராவூரணி- 12.8, ஈச்சன்விடுதி- 5.2.

திருவாரூர் மாவட்டம்

குடவாசல்- 79.3, நீடாமங்கலம்- 68.6, நன்னிலம்- 63.2, மன்னார்குடி- 63, வலங்கைமான்- 59.8, திருவாரூர்- 56.4, திருத்துறைப்பூண்டி- 32, பாண்டவையாறு- 29.2, முத்துப்பேட்டை- 22.7.

நாகப்பட்டினம் மாவட்டம்

கொள்ளிடம்- 137, சீர்காழி- 116.6, மயிலாடுதுறை- 88.2, மணல்மேடு- 85.2, தரங்கம்பாடி- 71, நாகப்பட்டினம்- 63.2, திருப்பூண்டி- 44, தலைஞாயிறு- 36.6, வேதாரண்யம்- 21.4.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

‘நிவர்’ புயலால் பெரம்பலூர் மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கத்தை விட மழை குறைவாகவே பொழிந்தது. இதனால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

செட்டிக்குளம்- 24, பாடாலூர்- 14, அகரம்சீகூர்- 74, எறையூர், லப்பைக்குடிகாடு தலா- 60, புதுவேட்டக்குடி- 43, பெரம்பலூர்- 31, கிருஷ்ணாபுரம்- 27, தழுதாழை- 21, வி.களத்தூர்- 32, வேப்பந்தட்டை- 28.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

வடகிழக்கு பருவமழை தொடங்கி இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யாததால் நீர்வள ஆதாரத்துறையின் கீழ் உள்ள 961 ஏரி, கண்மாய்களில் சராசரியாக 30 சதவீதம் அளவுக்கே தண்ணீர் தேங்கி உள்ளது.

மேலும், புயல் காரணமாக கன மழை பொழியும் என எதிர்பார்த்த நிலையில் போதிய மழையில்லாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

கறம்பக்குடி- 28, ஆதனக்கோட்டை- 23, மழையூர்- 19, பெருங்களூர்- 17, கீரனூர்- 13, புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி- தலா 8, திருமயம்- 7, கீழாநிலை- 6, ஆவுடையார்கோவில் 5, நாகுடி- 4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x