3 வீடுகளின் சுவர்கள் சேதம்

3 வீடுகளின் சுவர்கள் சேதம்

Published on

‘நிவர்' புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர்மழையின் காரணமாக ரெட்டிபாளையம் அருகேயுள்ள புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கோவிந்தம்மாள் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது.

அதேபோல, நாகமங்கலம் இந்திரா நகரில் ரோஸ்லி என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும், வைப்பூர் கிராமத்தில் உள்ள திலீப்குமார் என்பவரின் கூரை வீட்டின் ஒரு பக்க மண் சுவரும் இடிந்து விழுந்தது. இவற்றை வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் பார்வையிட்டு சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in