கரோனா, தொடர் மழை, வேலையாள் பற்றாக்குறையால் கார்த்திகை தீப விழாவுக்கு அகல் விளக்குகள் உற்பத்தி பாதிப்பு

திருநெல்வேலி அருகே குறிச்சியில் திருக்கார்த்திகைக்காக தயாரான அகல் விளக்குகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன். படம்: மு.லெட்சுமி அருண்.
திருநெல்வேலி அருகே குறிச்சியில் திருக்கார்த்திகைக்காக தயாரான அகல் விளக்குகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறுவன். படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

திருநெல்வேலியில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு மண் அகல்விளக்குகள் உற்பத்தி இவ்வாண்டு குறைந்திருக்கிறது. கரோனா பாதிப்பு, தொடர் மழை, வேலையாட்கள் பற்றாக்குறை என்று பல்வேறு பிரச்சினைகளால் போதிய உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

திருக்கார்த்திகை தீபத்திரு விழா வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலையில் கோயில்களிலும், வீடுகளிலும் அகல்விளக்குகள் ஏற்றப்படும். இதற்காக அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அதேநேரத்தில், `போதிய அளவுக்கு உற்பத்தி செய்ய முடியவில்லை’ என்று, மண்பாண்டத் தொழிலாளர்கள் தெரி விக்கிறார்கள். மேலப்பாளையம் குறிச்சி, காருகுறிச்சி, தேன்பொத்தை, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடந்த மாதத்திலிருந்து மண் அகல்விளக்குகள் உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 5 மி.லி. முதல் 1 லி வரையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் வகையில் இந்த விளக்குகள் தயாரிக்கப்பட்டன.

உற்பத்தி பாதிப்பு

மேலும், கரோனாவால் வெளி மாவட்ட, கேரள வியாபாரிகளிடம் இருந்து போதிய ஆர்டர் கிடைக்கவில்லை. இதனால், குறைந்த அளவுக்கே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அவற்றை வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.

விலை உயரவில்லை

உற்பத்தி பாதிக்கப்பட்டிருந் தாலும் கடந்த ஆண்டைப்போலவே விளக்குகளின் விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தது. விலையை உயர்த்த வில்லை. விளக்குகளின் தரத்தை பொருத்து மொத்த விலையில் அகல்விளக்குகள், அடுக்கு விளக்குகள், ஜோடி விளக்குகள் என்று விதவிதமான விளக்குகள் ரூ.2 முதல் ரூ.40 வரை இங்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனை செய்கிறார்கள்.

மண் எடுப்பதில் சிரமம்

தேவையான மணல் கிடைப்பதில்லை. இதனால் வேறுதொழில்களுக்கு மண் பாண்ட தொழிலாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இத் தொழிலை அழிவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in