சிதம்பரம்- கடலூர் சாலையில் சின்னகுமட்டி பகுதியில் விழுந்த புளிய மரத்தை பொக்கலைன் கொண்டு அகற்றுகின்றனர்.
சிதம்பரம்- கடலூர் சாலையில் சின்னகுமட்டி பகுதியில் விழுந்த புளிய மரத்தை பொக்கலைன் கொண்டு அகற்றுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கன மழை

Published on

கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

கடலூர் மாவட்டத்தில் நேற்றுகாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.கடலூர், சிதம்பரம்,பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது.

கடலூர்- சிதம்பரம் சாலையில் நேற்று சின்னகுமட்டி கிராமம் அருகே புளியமரம் ஒன்று சாலையில் விழுந்தது. அது உடனடியாக அகற்றப்பட்டது.கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சாமியார்பேட்டை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூர் துறைமுகத்தில் 10 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

நேற்றைய மழையளவு (மில்லிமீட்டரில்) கடலூர் 18, சிதம்பரம் 17.8, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் 16.8, பரங்கிப்பேட்டை 16.1, வானமாதேவி 15, புவனகிரி 12, பண்ருட்டி 11, விருத்தாசலம் 11, காட்டுமன்னார்கோவில் 9.8, லால்பேட்டை 8.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in