Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடக்கம் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்

நாமக்கல்

எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன் எலச்சிபாளையத்தில் இருந்து குமரமங்கலத்திற்கு ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால், எலச்சிபாளையம் சுற்றுவட்டார கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு 108 ஆம்புலன்ஸை மீண்டும் எலச்சிபாளையத்தில் இருந்து இயக்க வேண்டுமென கோரிக்கைவிடுக்கப்பட்டு வந்தது. எனினும், ஆம்புலன்ஸ் இயக்கப்படாமல் இருந்தது. ஆம்புலன்ஸை மீண்டும் எலச்சிபாளையத்தில் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டும் போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எலச்சிபாளையத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் மாவட்ட சுகாதாரத் துறையினர் 108 ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் எலச்சிபாளையத்தில் நேற்று தொடங்கியது. இதையடுத்து ஆம்புலன்ஸூக்கு எலச்சிபாளையம் மக்கள் மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x