Regional01
மணல் கடத்திய 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள பொய்கைப்பட்டி பகுதியில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மணப்பாறை போலீஸார் நேற்று முன்தினம் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு அனுமதியின்றி மணல் எடுத்து கடத்திச் செல்ல முயன்றதாக, லாரி உரிமையாளரான வடக்கு இடையப்பட்டியைச் சேர்ந்த நாகராஜன் மகன் தர்மராஜ்(24), லாரி ஓட்டுநரான சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் முத்து கிருஷ்ணன்(27) ஆகியோரை போலீஸார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
