பிளாசம் ரோட்டரி சங்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம்

வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிருக்கு ரோட்டரி சங்கத் தலைவர்  லட்சுமி பன்ஸிதர், உதவி ஆளுநர் தேவசேனா முரளி ஆகியோர்  நினைவுப் பரிசு வழங்கினர்.
வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் அப்துல்காதிருக்கு ரோட்டரி சங்கத் தலைவர்  லட்சுமி பன்ஸிதர், உதவி ஆளுநர் தேவசேனா முரளி ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.
Updated on
1 min read

சங்கத் தலைவர்  லட்சுமி பன்ஸிதர் தலைமை உரையாற்றினார். உதவி ஆளுநர் தேவசேனா முரளி வரவேற்றார். ஜெஸிந்தா தர்மா சிறப்புரையாற்றினார். வக்பு வாரியக் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் அப்துல் காதிர் புதிய கல்விக் கொள்கை-2020 பற்றி விரிவான விளக்க உரையாற்றினார். முன்னதாக கல்வியின் அவசியம் குறித்து நந்தகுமார் பேசினார். மகாத்மா குளோபல் பள்ளி, மாநகராட்சி கஸ்தூரிபாய் காந்தி மகளிர் பள்ளி, கிரவுன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.கே.கே. பிளே குரூப் பள்ளி, சௌராஷ்ட்ரா மகளிர் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து 95-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்க இறுதியில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கிருபா தொகுத்து வழங்கினார். செயலாளர் ஜெயந்தி கலைராஜன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in