

இந்த சைக்கிள் சூரிய சக்தியாலும், பேட்டரியாலும் இயங்கும் என்பது சிறப்பம்சம். ரீசார்ஜ் செய்தால் குறைந்தது 30 கி.மீ. வரை ஓடும். இதில் பயன்படுத்தக் கூடிய சூரியத் தகடு 24 வோல்ட் மற்றும் 12 ஆம்பியர் கொள்ளளவு உள்ளது. சூரியத் தகடு மூலம் தொடர்ந்து 50 கி.மீ இயங்கும். மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும்.
முதலில் பேட்டரியில் இயங்க ஆரம்பித்து தொடர்ந்து சூரிய சக்தியால் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி செயல்திறன் குறையும்போது, சாதாரண சைக்கிள்போல பயன்படுத்த முடியும். இதனை இயற்பியல் துறை பேராசிரியர்கள் உறுதுணையோடு வடிவமைத்துள்ளார்.
கல்லூரி முதல்வர் ம.தவமணி கிறிஸ்டோபர் மாணவர் தனுஷ்குமாரை பாராட்டினார். இதுபோன்ற புதிய படைப்புகளை பிற மாணவர்களும் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றார்.