

ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்குத் தடை விதித்தது சரியான முடிவு என உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதி த்து அவசரச் சட்டம் நிறைவேற் றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசார ணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். செல்போன், கணினி எதில் விளையாடினாலும் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி கண்ட றியப்படும், என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசு சரியான முடிவு எடுத்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து நிறைவேற்றப்பட்ட அவசரச் சட்டத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுத் தீர்ப்புக்காக வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத் தனர்.