

மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதிச்சியம் எஸ்ஐ கருணாநிதி தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது வைகை வடகரைப் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கிய 9 பேரைப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த ரவுடிகள் மணிப்பாண்டி (23), சதீஸ்(எ) சுருட்டை சதீஸ் (22), வைகை வட கரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் (25), மற்றும் முகேஷ்(21) நாகேசுவரன் (19), சூரியா (24), மூன்று சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் ஆயுதங்கள் மூலம் சதிச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்திகள், மிளகாய்ப் பொடி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.