ஆண்டு மொத்த மழையளவில் ஈரோட்டில் இதுவரை 687 மி.மீ. மழைப்பொழிவு ஆட்சியர் சி.கதிரவன் தகவல்

ஈரோட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈரோட்டில் நேற்று காணொலிக் காட்சி மூலம் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 717.0 மி.மீ ஆக உள்ள நிலையில், இதுவரை 687.47 மி.மீ மழை பெய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நடந்த வேளாண் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது

ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 717.0 மிமீ ஆகும். இதில், கடந்த 23-ம் தேதி வரை 687.47 மி.மீ பெய்துள்ளது. மாவட்டத்தில் நவம்பர் மாதம் முடிய 78 ஆயிரத்து 759 ஹெக்டர் பரப்பில் வேளாண் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் விதைகள் 289 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 17 மெட்ரிக் டன், பயறு வகைகள் 24 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 107 மெட்ரிக் டன் விதைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயக்கட்டு பகுதிகள் முழுவதும் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை களப்பணியாளர்கள் வயல்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிப்பு ஏதேனும் இருந்தால் பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் காப்பீடு செய்ய வரும் 30-ம் தேதி கடைசி நாளாகும்.

மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்கும் வகையில், ‘உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்த குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி உள்ளிட்ட அதிகாரிகள், பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in