Published : 25 Nov 2020 03:16 AM
Last Updated : 25 Nov 2020 03:16 AM

சமூக நலத்துறை சார்பில் இம்மாத இறுதிக்குள் நிலுவை பணிகளை முடிக்க வேண்டும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஷ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் நிலுவையில் உள்ள பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடை பெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஷ்வரி முன்னிலை வகித்தார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் 6 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள், 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவி திட்டம் ஆகியவை காலதாமதம் இன்றி பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்திட்டங்கள் மூலம் நிலுவையில் உள்ள பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும். இலவச தையல் இயந்திரம், குழந்தை திருமணம் தடுப்பு திட்டம், முதியோர் பாதுகாப்பு இல்லம் ஆய்வு மற்றும் இதர பணிகளை சமூக நலத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் திட்டங்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை சார்பில் 985 அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உணவுப்பொருட்கள் முறையாக அவர்களின் குடும்பங்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் வழங்க வேண்டும். கரோனா தடுப்புப்பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

மேலும், திருப்பத்தூர் மாவட் டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து ஆய்வு செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்து மாதத்தில் தொடங்கப்பட்ட பணிகள் தற் போது எந்த நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான உதவிகள் அல்லது அங்கன்வாடி பணியாளர்களுக்கு உள்ள பிரச் சினைகளை தீர்வுகாண நேரடியாக எனது கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x