

கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. 'நிவர்' புயலை எதிர் கொள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறியுள்ளது.இதனால் விழுப்புரம், கடலூர்,நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்று பலத்த காற்று அடிக்கும், மழையும் பெய்யும். நாளை 'நிவர்' புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலூர் தேவானம்பட்டினம், அக்கரைகோரி, தாழங்குடா, முடலோடை, அன்னங்கோவில், கிள்ளை உட்பட 50 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
படகுகள் அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. கடல் கடும் சீற்றத் துடன் காணப்படுகிறது.
கடலூர்
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால்,கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி, கூரை வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல கடந்த மூன்று நாட்களாக ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 21-ம் தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு கொடுத்துள்ளோம், இதனை கேட்டு கடலுக்கு சென்ற மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர். கடலூர்,சிதம்பரம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.164 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
புயல் பாதுகாப்பிற்கு என அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அந்தந்த பகுதிகளுக்கு சென்றுள் ளனர். உணவு, கழிவறை உள்ளிட்ட புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார்.
விழுப்புரம்
வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் அதிக உயரம் எழும்பி தரைப்பகுதியை தாக்குகிறது. இதன் காரணமாக மீனவர்கள் கடற்கரை ஓரம் நிறுத்தி வைத் திருந்த பைபர் படகுகள், மீன் பிடிவலைகள் மற்றும் இன்ஜின் களை மேடான இடத்திற்கு பாது காப்பாக எடுத்துச்சென்றனர்.
புயல் இப்பகுதியில் தாக்கினால் கடும்பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இதனால் கடற்கரை ஓரம் உள்ள மீனவர்கள் மற்றும் பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூரை வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல கடந்த மூன்று நாட்களாக ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.