

வேளாண் துறையைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பேரையூர் தாலுகா தமிழ் விவசாயிகள் சங் கம் சார்பில் மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரையூர் தாலுகா பகுதியில் சாகுபடி செய்த மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க புழுக்கள் எனப்படும் ஒரு வகை படைப் புழுக்கள் தாக்கம் அதிகரித் துள்ளது. இந்தத் தாக்குதலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நோய்ப் பரவலைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பயிர்க் காப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.