காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகளை மீட்கக் கோரி மனு

முசிறி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகளை மீட்டுத் தரக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
முசிறி காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகளை மீட்டுத் தரக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் முசிறி கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி மனைவி ஜெயலட்சுமி (57). இவரது சகோதரர் ஈரோட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (45), உறவினர்களான கோவையை சேர்ந்த சரவணக்குமார் (31), இவரது மனைவி துர்கா (25), கரூரைச் சேர்ந்த ரகுராமனின் மகன்கள் ரத்தீஷ்குமார் (12), மிதுனேஷ் (8) உட்பட 9 பேர் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு அண்மையில் வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 17-ம் தேதி முசிறி பரிசல்துறை காவிரிப் படித்துறைக்கு குளிக்கச் சென்றனர். அப்போது, சரவணக்குமார், ரத்தீஷ்குமார், மிதுனேஷ் ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவலறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு சென்று புதை மணலில் சிக்கி உயிரிழந்த நிலையில் சரவணக்குமாரின் உடலை மீட்டனர். மேலும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மற்ற 2 குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில், அவர்களது பெற்றோர் ரகுராமன்- ரேவதி மற்றும் உறவினர்கள் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து 2 குழந் தைகளையும் மீட்டுத் தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கதறியழுதவாறு மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in