

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற 4-ம் நாள் உற்சவத் தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஆகியோர் பவனி வந்தனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருவதை யொட்டி, மூலவர் மற்றும் அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, 4-ம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் நேற்று காலை வலம் வந்தனர். பின்னர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வெள்ளி விமானத்தில் வலம் வந்தனர். கரோனா பரவல் காரணமாக, மாட வீதியில் நடைபெற வேண்டிய உற்சவம், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது.
5-ம் நாள் உற்சவம்