கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 13 வழக்குகளில் காணாமல் போனவர்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாயமானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தும் கள்ளக்குறிச்சி போலீஸார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாயமானவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தும் கள்ளக்குறிச்சி போலீஸார்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் காணாமல் போனவர் களை அடையாளம் கண்டுபிடிக்க சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியா வுல்ஹக் உத்தரவின் பேரில் கள் ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையில் மாவட்டத்தில் மாயமானவர்களை, அவர்களின் உறவினர்கள் உதவியுடன் கண்டு பிடிப்பதற்கான சிறப்பு முகாம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காணாமல் போனவர்களின் 52 வழக்குகள் தொடர்பாக, சுமார் 37 குடும்ப உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவண காப்ப கத்தில், மொத்தம் 325 உடல்களின் புகைப்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. உறவினர்கள் கூறும் அடையாளங்களை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இதில் காணாமல் போன 9 வழக்குகள் மற்றும் இறந்து போய் அடையாளம் தெரியாமல் உடல் உள்ள ஒரு வழக்கு என மொத்தம் 10 வழக்குகளில் அடையாளம் காணப்பட்டது.

இதேபோன்று விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன் தலை மையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காணாமல் போனவர் களை அவர்களது உறவினர்கள் உதவியுடன் கண்டுபிடிப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 82 வழக்குகளில் 78 குடும்பஉறுப்பினர்கள் கலந்து கொண் டனர். 3 வழக்குகளில் காணாமல் போனவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in