

மதுரை யாதவா கல்லூரியில் கடந்த 1998-2001-ல் வணிகவியல் துறையில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் அத்துறையின் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
சென்னை பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் திருவாசகம், பேராசிரியர்கள் கண்ணன், சம்பத், சிவாஜி, கணேசன், வள்ளி தேவசேனா, மலைச்செல்வம், குணசேகரன், சொக்க லிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை யாற்றினர்.
முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறைகள் உள்ளிட்ட இடங் களுக்குச் சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சுதாகரன், அமிர்தராஜ், திருப்பதி, செந்தில் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.