Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

கோவையில் போலி மாசுக் கட்டுப்பாடு சான்று விநியோகம்போக்குவரத்து ஆணையருக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம்

கோவை: மோட்டார் வாகன சட்டப்படி அனைத்து வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாடு சான்று (பியுசி) பெற்றிருப்பது கட்டாயமாகும். அதை 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். கோவை உட்பட பல மாவட்டங்களில் அண்மைக்காலமாக அனுமதி பெறாமல் போலியாக வாகன புகை பரிசோதனை சான்றுகள் வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், போலி வாகன புகை பரிசோதனை மையங்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநருக்கு கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் லோகு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஆணையருக்கு ஊழல் தடுப்பு துறை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x