Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

அம்பேத்கர் விருது பெற நவ.25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இது தொடர்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட அறிக்கைகளின் விவரம்: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்துக்காக அரிய தொண்டாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வரும் 2021-ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று அண்ணல் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கான விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவத்தை பெற்று, அவற்றை வரும் 25-ம் தேதிக்குள் அதே அலுவலகங்களில் சேர்ப்பிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x