கடத்தப்பட்ட டிரைவர் கொலையா? ஆந்திர போலீஸார் கடலூரில் விசாரணை

கடத்தப்பட்ட டிரைவர் கொலையா? ஆந்திர போலீஸார் கடலூரில் விசாரணை

Published on

கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்மொழி (55). இவரதுமகன் வினோத்குமார் (24). இவர் சென்னையில் தனியார் கார் டிரா வல்ஸ் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். வினோத்குமார் கடந்த 11-ம் தேதி தீபாவளி பண் டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 16-ம் தேதி சென்னையில் இருந்து ஒரு கும்பல் காரில் வினோத்குமார் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வினோத்குமாரை கட்டாயப்படுத்தி காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து வினோத்குமாரின் தந்தை அருள்மொழி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றதாக 16-ம் தேதி புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதி போலீ ஸார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் ஆந்திரா கடப்பா பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் அவர் வினோத் குமார் என்பதும் தெரிய வந்ததாகதெரிவித்தனர். கொலை செய்யப் பட்டது வினோத்குமார் என்பதை அவர்களது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் நேரில் வந்து பார்வையிட்டு உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் நிலைய இன்ஸ் பெக்டர் உதயகுமார் மற்றும் போலீ ஸார் வினோத்குமார் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி, அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள இளைஞர் வினோத்குமார்தான் என்பதை உறுதி செய்ய ஆந்திரா போலீஸாருடன் அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in