

செஞ்சி அருகே புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் மகள் தேவி (32). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் முடிந்து,ஒரு மகனும் ஒரு மகளும் உள்ள னர். கூலித் தொழிலாளியான முருகனின் குடிப்பழக்கத்தால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வருவ துண்டு.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகன் வழக்கம் போல குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுள்ளார். மனமுடைந்த தேவி, தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயில் கருகிய தேவி, அங்கேயே உயிரிழந்தார். நல்லாண்பிள்ளைப்பெற்றாள் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.