Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

மதுரை வேளாண் கல்லூரியில் பசுமை உணவுகள் அறிமுகம்

மதுரை வேளாண் கல்லுாரி, சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில் நுட்ப வணிக பொரிப்பகம், வேளாண் வணிகப் பொரிப்பக சங்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, இளம் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர்கள் ஆகியவை இணைந்து நூறு வகை கீரைகள் மற்றும் பசுமை உணவு கண்காட்சியை நடத்தின.

மதுரை வேளாண் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சியில், பசுமை உணவு லோகோவை மதுரை அப்போலோ மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.சேகர் அறிமுகப்படுத்தினார். வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் மற்றும் ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவன இயக்குநர் எம்.நாச்சிமுத்து முத லாவது பசுமை உணவு விற்ப னையைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி டீன் வி.கே பால்பாண்டி, சமுதாயக் கல்லூரி டீன் எஸ்.அமுதா, மதுரை எம்ஏபிஐஎப் தலைமை செயல் அதிகாரி பி.சிவக்குமார், கீரைக் கடை வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் செயல் சமையலர் ஏ.எஸ் ராமலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண் டனர். இது குறித்து கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராம் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது:

உலகில் முதல் முறையாக உடனடி உணவு வகையாக பசுமை உணவை அறிமுகம் செய்துள்ளோம். வாழைப் பூ கூட்டு, கீரைக் கூட்டு, வாழைத்தண்டு கூட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் கண்டறியப்பட்ட 250 கிராம் பசுமை உணவு 85 ரூபாய் ஆகும். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொருட்களை உட னடியாகத் தயாரித்து, உடனே சமைத்து பேக்கிங் செய்கிறோம். உணவைப் பாதுகாக்க ரசாயனம் சேர்க்கப்படவில்லை.

உணவு பாதுகாப்பு விதிமு றைகளைப் பின்பற்றி சான்றிதழ் பெற்றுள்ளோம். பசுமை உணவுக்கு காப்புரிமை பெற்றுள்ளோம். பசுமை உணவை ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x