Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

பசுமை வீடு பணிகளை டிசம்பருக்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு கடலூர் ஆட்சியர் உத்தரவு

முஷ்ணம் ஊராட்சியில் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் குடிநீர் இணைப்புப் பணியை ஆய்வு செய்யும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி.

விருத்தாசலம்

முஷ்ணம் மற்றும் விருத்தா சலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை கடலூர் மாவட்டஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம், கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.85.3 லட்சம் மதிப்பீட்டில் பொதுகுடிநீர் இணைப்பு மற்றும் தனிநபர் வீடுகளுக்கு 812 குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் சந்திரசே கர் சாகமூரி அதன் உபயோகம் குறித்து பயனாளிகளிடம் கேட்ட றிந்தார். தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆதிவராகநல்லூர் ஊராட்சி யில் ரூ.1.56 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

முஷ்ணம் ஊராட்சி ஒன் றியம்தேத்தாம்பட்டு ஊராட்சியில் , ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.29 லட்சம் மதிப்பீட்டில் பொதுகுடிநீர் இணைப்பு மற்றும் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு அமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டார். "கடலூர் மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பசுமை வீடுகள் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நடைபெற்று வரும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வுகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x