

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு ஸ்கேன் எடுக்க வரும் பெற்றோர் முகக்கவசம் அணியாமல் திரள்வதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவும் காலம் என்பதால், மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள், பார்வையாளர்கள் உள்பட அனை வருக்கும் முகக்கவசம், கை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், பச்சிளம் குழந்தை களுக்கு தலைப்பகுதியில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அறியக்கூடிய `அல்ட்ரா நியூரோ சோனாகிராம் ஸ்கேன்' எடுக்கப்படும் பகுதியில் மட்டும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை. தினமும் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர், ஸ்கேன் எடுக்க வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முகக் கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்று வதில்லை. கும்பலாக ஒரே பகுதியில் குழந்தைகளுடனும், மற்ற நோயாளிகளுடனும் அமர்ந்தி ருக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறை வாக இருக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பு இன்றி இப்படி வைத் திருப்பதால் கரோனா பரவும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து ஸ்கேன் மைய மருத்துவர்களிடம் கேட்டபோது,
‘‘தேவையுள்ள குழந்தை களுக்கு மட்டும் அல்ட்ரா ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். ஆனால், தொற்று பரவும் காலத்தில் ரத்தப் பரிசோதனை செய்வது போல் குழந்தைகள் அனைவருக்கும் ஸ்கேன் எடுக்க அனுப்பி விடுகின்றனர். இதற்காக மணிக்கணக்கில் பெற்றோர் காத்திருக்கின்றனர். ஆனால், ஸ்கேன் எடுக்க குறைந்தபட்சம் 15 நிமிடங்கள்தான் ஆகும்.
ஸ்கேன் எடுக்க வருவோர் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அதனால், அவர்களிடம் இருந்து குழந்தை களுக்கும், மற்ற மருத்துவப் பணியாளர்களுக்கும் கரோனா பரவும் அபாயம் உள்ளது,’’ என் றனர்.