

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விபின்குமார் (28). இவர் மானாமதுரை ரயில்வேயில் டிராக் ஊழியராகப் பணிபுரிந்தார். அப்போது தான் வசித்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாக, புகாரின்பேரில் அவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாபுலால், விபின்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.