நாம் தமிழர் வேல் நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு

நாம் தமிழர் வேல் நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு
Updated on
1 min read

நாம் தமிழர் கட்சி சார்பில் வேல் நடைபயணம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல்லில் இருந்து பழநிக்கு இன்று (நவ.21) வேல் நடை பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டு பழநி மண்டல நாம் தமி ழர் கட்சி செயலாளர் கஜா, உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நிஷாபானு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் நாம் தமிழர் கட்சியின் வேல் நடை பயணத்துக்கு அனுமதி வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் நிலையில், அனைத்து மதத்தினரும் இதுபோல அனுமதி கேட்க வாய்ப்புள்ளது. எனவே, நாம் தமிழர் கட்சியின் வேல் நடை பயணத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்றார்.

ஜனவரி மாதம் வேல் நடைப் பயணம் நடத்த மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

அதற்கு அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு எடுக்கும் என்று கூறி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in