

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம், கோயில் உட்பிரகாரத்திலேயே நேற்று நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணியசுவாமி கோயிலில், இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, கடந்த 15-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கோவர்த்தனாம்பிகையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மாலையில் சூரசம் ஹாரம் நடந்தது. இதற்காக உற் சவர் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் புஷ்ப பல்லக்கில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்த ருளினார். அங்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி மீண்டும் உற்சவர் சன்னதியில் எழுந்தருளினார். பின்னர் திருக் கல்யாணம் நடந்ததும், சிறப்பு அபி ஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பக்தர்கள் அனுமதி இல்லை
சோலைமலையில்...
கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மட்டும் பங் கேற்றனர். இன்று காலை சுப்பிர மணியசுவாமிக்கு திருக்கல் யாணம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்வுகள் இணையம் வழியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.