திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து 11 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக மாவட்ட செயலாளரை கண்டித்து 11 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திமுக மாவட்டச் செயலாளரைக் கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 11 இடங்களில் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி ந.தியாகராஜன். இவர் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதாகவும், அவரைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், மாநகர் மாவட்டச் செயலாளர் என்.நடராஜன் ஆகியோர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

இதன்படி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் 11 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரங்கம் ரங்கநாதர் கோயில் ராஜகோபுரம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பகுதிச் செயலாளர்கள் சி.சுந்தரராஜன், ஜி.திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதேபோல பேட்டை வாய்த்தலை, சோமரசம்பேட்டை, சமயபுரம் நான்கு சாலை, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம், உப்பிலியபுரம், தாத்தையங்கார்பேட்டை ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in