

திருப்பரங்குன்றம் அருகே கண் மாயிலிருந்து மடை வழியே தண்ணீரை திறந்து விடக்கோரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருப் பரங்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த பெரியார் நகர் பகுதியில் உள்ளது கரிசல்குளம் கண்மாய். தொடர் மழையால் இந்த கண்மாயில் தண்ணீர் நிரம்பி வழியும் நிலை யில் உள்ளது.
இந்நிலையில், மடை உடைந்து குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள், மடையை திறந்து விடக்கோரி மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் மறியல் செய் தனர்.
அவர்களிடம் அவனியாபுரம் மற்றும் சிலைமான் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, மீன்படி குத்தகைதாரர்களுக்கு ஆதர வாக செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் மடையை திறக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.