ஊர்க்காவல் படைக்கு நெல்லையில் ஆட்கள் தேர்வு

திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு பாளை. ஆயுதப் படை மைதான த்தில் நேற்று நடை பெற்றது.

மாநகர காவல்துறை ஊர் க்காவல் படையிர் தற்போது 50 பேர் பணியாற்றுகிறார்கள். போலீஸா ருடன் இணைந்து பாதுகாப்பு பணிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதலிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் மேலும் 40 ஆண்கள், 9 பெண்களை ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யும் முகாம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முகாமில் 120 ஆண்கள், 20 பெண்கள் பங்கேற்றிருந்தனர். ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர், ஆய்வாளர் பேச்சி, உதவி ஆய்வாளர் கண்ணதாசன் வட்டார தளபதி சின்னராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இதில் தகுதி வாய்ந்த 40 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in