முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103-வது பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, வாணியம்பாடியில் உள்ள அவரது  சிலைக்கு நேற்று  மாலை அணிவித்து மரியாதை  செலுத்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம்பாஷா.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, வாணியம்பாடியில் உள்ள அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம்பாஷா.
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103-வது பிறந்த நாளையொட்டி வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப்பிரிவு தலைவர் அஸ்லாம்பாஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, பொதுமக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி அடுத்த மேட்டுப் பாளையம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி உருவச்சிலைக்கும் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

அதேபோல், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள இந்திரா காந்தி உருவச்சிலைக்கு காங்கிரஸ் மேற்கு மாவட்டச் செயலாளர் பிரபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய்இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட சட்டப் பேரவை பொறுப்பாளர் பரத் வரவேற்றார்.

இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in