Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

வேலூரில் நாளை மின் நிறுத்தம்

வேலூர்: வேலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து வேலூர் மின் பகிர்மான வட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் துணை மின் நிலையத்தில் மின்சாதன பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் நாளை (21-ம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் நகரம், பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x