

அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாநில செயலாளர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் நந்தாசிங், சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.