வடமதுரை அருகே கடன் வாங்கியவர் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்து மிரட்டலில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் மணிமுத்து.
வடமதுரை அருகே கடன் வாங்கியவர் வீட்டுக்குள் புகுந்து கட்டிலில் படுத்து மிரட்டலில் ஈடுபட்ட நிதி நிறுவன ஊழியர் மணிமுத்து.

பெண்ணிடம் கடன் தொகையை கேட்டு மிரட்டல் தனியார் நிதி நிறுவன ஊழியர் கைது

Published on

பெண்ணிடம் கடன் தொகையை கேட்டு மிரட்டிய தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை அருகே காக்காயன் குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இவரால் கரோனா ஊரடங்கு காலத்தில் கடனை முறையாக திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் நிதி நிறுவன ஊழியர் மணிமுத்து(30) என்பவர் அடிக்கடி கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்து கடன் தொகையை செலுத்துமாறு வலி யுறுத்தியுள்ளார். சில தினங்க ளுக்கு முன்பு வந்தபோது கிருஷ்ணகுமார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அவரது மனைவி முத்துலட்சுமி மட்டும் இருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மணிமுத்து(31), கட்டிலில் படுத்துக் கொண்டு கடன் தொகையைக் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவியது. இதையடுத்து மணிமுத்துவை வடமதுரை போலீ ஸார் கைதுசெய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in