தாந்தோணிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

தாந்தோணிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்
Updated on
1 min read

கரூரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தாந்தோணிமலை பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருவதால் அப்பகுதியில் சாக்கடை நீர் செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் வஉசி நகர், சவரிமுடி தெரு, வடக்கு தெரு, வெங்கடேஷ்வரா 4-வது குறுக்குத்தெரு ஆகிய பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நேற்று மழை வெள்ளம் புகுந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் தாந் தோணிமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்கள் அங்குள்ள சமு தாயக் கூடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சமுதாயக் கூடத்திலேயே இரவு உணவு தயாரித்து வழங்கப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in