விக்கிரமசிங்கபுரத்தில் புத்தக கண்காட்சி

விக்கிரமசிங்கபுரத்தில் புத்தக கண்காட்சி
Updated on
1 min read

விக்கிரமசிங்கபுரம் மேலரதவீதி நகராட்சி கலையரங்கத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலக பொதிகை வாசகர் வட்டம், அரிமா சங்கம், அமரகவி பாரதி விழாக்குழு, பல்சமய கூட்டமைப்பு, வெற்றி ஐஏஎஸ் அகாடமி சார்பில் புத்தக கண்காட்சி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தொடக்க விழாவுக்கு பொதிகை வாசகர் வட்ட நிர்வாகி இளங்கோ தலைமை வகித்தார். அரசு கிளை நூலகர் திருகுமார் வரவேற்றார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி , விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பொறியாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி கல்லூரி தமிழ்த்துறை தலைவர் எம்.குமார் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் பொதிகை வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் மைதீன் பிச்சை ஆகியோர் முதல் விற்பனையை பெற்றுகொண்டு வாழ்த்துரை வழங்கினர் . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாரதி கண்ணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in