

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகேசோரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் சிவகொழுந்து. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்க ளுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின் றனர். நேற்று முன்தினம் இவர்க ளது வீட்டின் கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்தது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர்.
இதுகுறித்து பாகூர் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண் ணீரை பீயச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடுமுற்றிலும் எரிந்தது. வீட்டில் இருந்த டிவி, மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகி சேத மானது. பாகூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.