

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளனூரில் உள்ள கோயில் திடலில் தீபாவளி பண்டிகையையொட்டி அனுமதியின்றி நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி இளைஞர்கள் முயன்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற உடையாளிப்பட்டி போலீஸார், அங்கு கூடியிருந்தோரை கலைந்துபோகச் செய்தனர்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்ட சுந்தம்பட்டியைச் சேர்ந்த எல்.யோகேஸ்வரன்(20), கிள்ளனூரைச் சேர்ந்த டி.ராமலிங்கம், எஸ்.ராமலிங்கம், சி.பாக்கியராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, யோகேஸ்வரனை கைது செய்தனர்.