

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோரை தேடிச் சென்று, 25-க்கும் மேற்பட்டோருக்கு உணவு, இனிப்பு, பலகாரம் ஆகியவற்றை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்பினர் நேற்று வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முகமது இலியாஸ் அலி, நகரத் தலைவர் நிஜாமுதீன், ஹைதர் அலி, மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.