மாநகரில் கூடுதலாக 25 டன் குப்பை

மாநகரில் கூடுதலாக 25 டன் குப்பை
Updated on
1 min read

திருச்சி மாநகரில் சராசரியாக தினமும் 400 டன் முதல் 450 டன் வரை குப்பை வரப்பெறும்.

இந்நிலையில், தீபாவளி பண்டி கைக்கு முந்தைய நாளில் முக்கிய கடைவீதிகளில் தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப் பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள் என நேற்று மாநகரில் வழக்கத்தைவிட 25 டன் குப்பை கூடுதலாக குவிந்தது.

இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் கூறியது:

தீபாவளி பண்டிகை நாளில் கோ-அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய 3 கோட்டங் களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக தலா 5 டன் குப்பை குவிந்துள்ளது. ஆனால் பெரிய கடைவீதி, பர்மா பஜார், என்எஸ்பி சாலை, மேலரண் சாலை உள்ளிட்ட கடைவீதிகளைக் கொண்ட ரங்கம் கோட்டத்தில் இருந்து வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக 10 டன் குப்பை குவிந்துள்ளது என்றனர்.

புதுக்கோட்டையில்...

இதேபோல, தீபாவளி பண்டி கையையொட்டி புதுக்கோட்டை யில் உள்ள கடைவீதிகளிலும், 42 வார்டுகளிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஏராளமான குப்பை தேங்கியது.

இந்த குப்பை மழையில் நனைந்து அழுகியதால், துர் நாற்றம் வீசத் தொடங்கியது. இதையடுத்து, 300 தூய்மைப் பணியாளர்கள் மூலம் 40 டன் அளவிலான குப்பை நேற்று அகற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in