

திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கியது. தினமும் உள்திருவிழாவாக யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கோயில் முன்பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து 21-ம் தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தபசு காட்சியும், சுவாமி காட்சி கொடுத்தல் வைபவமும் கோயில் உள்பகுதியில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பாளையங்கோட்டை சாலைகுமாரசுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆறுமுகர் சந்நிதி, வண்ணார்பேட்டை குட்டத் துறை சுப்பிரமணியர் கோயில், பாளையங் கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோயில் சுப்பிரமணியர் சந்நிதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.
ஆய்க்குடியில் பக்தர்கள் போராட்டம்
இந்நிலையில், நேற்று காலையில் பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடை பெற்றது. கோயில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில், கோயில் வளாகத்தில் ஆலோசனை நடத்திய இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். கொடியேற்றம் முடிந்த பின்னர், கோயிலுக்குள் ஏராளமானோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக் கப்படுவதுபோல், இங்கும் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகர்கோவில்
கோவில்பட்டி
செண்பகவல்லி அம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 8 மணி முதல் 10 மணி வரை மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. 10.30 மணிக்கு பழனியாண்டவர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.
கழுகுமலையில் ரத்து